Tuesday, March 9, 2010

வெட்கத்தை ஏன் என்னிடம் தந்தாய் ?

இணைக்க
வெட்கத்தை ஏன் என்னிடம் தந்தாய் ?



உன் 
அழகத்தனையும் 
அணிந்திருக்கிறது பௌர்ணமி.

வாழ்ந்து கெட்டவனைப்போல்
முகிலுக்குள் மறைவதும் 
பின் வெளியே வருவதுமாய் 
தயங்கித் தயங்கி
ஏதோ ஒன்றை
உன்னிடம் கேட்கிறதே !

மரண வெளிம்பின் 
கடைசித் துளியில் 
மாற்றான் புண்ணியத்தை யாசிக்கும் 
மாய வேடதாரிபோல் 
உன் வெட்கத்தை
இரவலாய் கேட்கிறது.

போகட்டும் -
வெட்கத்தை 
இரவலாய் கொடுத்துவிட்டு 
இருளைப் பெற்றுக்கொள் 
நாம்-
சூரியனைச் செய்வோம் 

பௌர்ணமி 
இருளைத் தருகிறது 
மாறாக - 
வெட்கத்தை 
ஏன் என்னிடம் தந்தாய் ? 

- மகரந்தன் 

1 comment:

Anonymous said...

My humblest gratitude to my hosts in Puducherry, as well as my hosts in Bangalore, Mysore, Hyderabad, Chennai, Trivandrum .... India in general! Jai Hind!

Ibrahim Waheed "Kalaavehi"