Sunday, October 4, 2009

உபரி வார்த்தைகள்

இணைக்க



கனத்துச் சிவந்த
ஆழ்ந்த கோடுகளாய்
எவரெவர்மீதோ
விழுந்திருக்க வேண்டிய
சாட்டை வரிகள்
அற்பச்சொல் செதுக்கும்
எழுத்துச் செங்கோல்
கிறுக்கிக் கிறுக்கி
கீறிக்கிழித்த
வெள்ளைத்தாளின்
அகமெங்கும்
புறமெங்கும்.


வெட்கிமுடியாமல்
வேதனையில் இயலாமல்
மௌனமாய்
மரித்துப்போயிருக்க வேண்டும்
அந்த -
அநாமதேய வெள்ளைத்தாள்
ஒரு வார்த்தையும்
ஏற்கமுடியாமல்.


செத்த வார்த்தைகளை
அலங்கரித்து மேடையேற்றும்
பராரிகளைத் தேடி
உபரியாய் உதிர்கின்றன.
இசங்களையும்
இயக்கங்களையும்
இயக்கும் வார்த்தைகள்.


செங்கோலின் முனை
வீங்கிக்கிடக்கிறது
அவ்வழியேகுவோர்
காறித் துப்பிய
எச்சிலில்.


- மகரந்தன்

1 comment:

மஞ்சூர் ராசா said...

காரித்துப்பிய எச்சிலில் செங்கோலின் முனை வீங்கிக்கிடக்கிறது - வித்தியாசமான சொல்லாடல்.

கவிதை நன்று. அதற்கான புகைப்படமும்.