Sunday, July 5, 2015

சலிப்புற்ற போர்க்கால பொழுது

இணைக்க


சலிப்புற்ற போர்க்கால பொழுது

இருளும் தீயும்
நீண்டுகிடக்கும்
நெடிய பாதை அது.

இரவுப் பறவையின் இறக்கைகள்
கட்டுக்கடங்காத சப்தத்தை
எழுப்பிக்கொண்டே இருக்கிறது.

சப்பாத்துகள் கண்ணீரால்
நிரப்பப்பட்டிருக்கிறது.
கடிகாரம்-
ஓய்வெடுக்கப் போய்விட்டது.

தூக்கத்திலும் சலிப்புற்று
ஆடைகள் கிழிந்துபோயிற்று

ஆனால் எல்லைக் கோடுகளுக்கு
எதிரெதிரே உட்கார்ந்திருக்கும்
ஆயுதங்களுக்கிடையே பரிமாறப்படும்
ஒரு கப் சூடான தேநீரில் பறக்கும் ஆவி
நெம்புகோலாகிறது
எல்லைமீறுகிறது அன்பு.

பொறியில் அகப்பட்ட எலியைபோல்
குற்றவாளிக் கூண்டில்
நின்றுகொண்டிருக்கிறார்கள்
பொதுஜனங்கள்.

      - மகரந்தன்

No comments: