
உன் தோலும்
என் தோலும்
ஒரே நிறம்தான்
"கறுப்பு"
உன் தொழிலும்
என் தொழிலும்
ஒரே மாதிரிதான்
"அடிமைத் தொழில்"
உன் ஊருக்கும்
என் ஊருக்கும்
ஒரே வித்தியாசம்தான்
"பறைச் சேரி"
"பள்ளிச் சேரி"
தின்ன இலையில்
பீ பேணவன் நீ என்றால்
அதற்கும் அஞ்சி
நகர்ந்து உட்கார்ந்தவன்
நான்
நகர்ந்து உட்கார்ந்தவனை
அழித்தொழிப்பேன் என்றால்
அதையே
தின்னக் கொடுத்தவனை
என்ன செய்வாய்?
காற்றுக்கும் தெரியாமல்
கழுவிக் கொள்வாயோ?
- மகரந்தன்
2 comments:
சூடாகவும் எதார்தமாகவும் உள்ளது நல்ல கவிதை
வெங்கடேஷ்
/நகர்ந்து உட்கார்ந்தவனை
அழித்தொழிப்பேன் என்றால்
அதையே
தின்னக் கொடுத்தவனை
என்ன செய்வாய்?
காற்றுக்கும் தெரியாமல்
கழுவிக் கொள்வாயோ?//
சு(ட்)டும் வரிகள் !
நன்றாக இருக்கிறது,
பாராட்டுக்கள் மகரந்தன் !
Post a Comment