Monday, July 25, 2011

புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழா

இணைக்க

புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழா

ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 150ஆவது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி புதுச்சேரியில் 6 நாட்கள் புத்தக கண்காட்சியும் ஒவ்வொரு நாள் மாலையிலும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.  இலக்கிய அன்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேம். 

நாள் : 29.07.2011 முதல் 03.08.2011 வரை  
இடம் : வர்த்தக சபை, என்.1 , சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி-1













Friday, July 22, 2011

கவிஞர் சிற்பி பவள விழா அழைப்பிதழ்

இணைக்க


கவிஞர் சிற்பி பவள விழா அழைப்பிதழ் 

நாள் : 30 & 31.07.2011
இடம் : சரோஜினி நடராசன் அரங்கம் 
கிக்காணி மேல்நிலைப்பள்ளி, கோவை - 2  

 





Thursday, July 21, 2011

இளையோர் பன்மொழி கவியரங்கம்

இணைக்க

இளையோர் பன்மொழி கவியரங்கம்

சாகித்திய அகாதெமி சார்பில் கர்நாடக மாநிலம், தார்வார் பகுதியில் நடைபெற்ற ரவீந்திரநாத் தாகூர் 150௦ஆவது பிறந்த நாளையொட்டி 18-07-2011 அன்று நடைபெற்ற இளையோர் பன்மொழி கவியரங்கத்தில் மகரந்தன் மற்றும் பிற மொழி கவிஞர்கள். 





புத்தக கண்காட்சி-இலக்கிய நிகழ்ச்சிகள்

இணைக்க

ரவீந்திரநாத் தாகூர் 150௦ஆவது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி சார்பில் 2011 ஜூலை 17 முதல் 21 வரை புத்தக கண்காட்சி மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள், கர்நாடக மாநிலம்,  தார்வார் மாவட்டத்தில் உள்ள கன்னட குலபுரோஹித வெங்கடராவ் பவனில் நடைபெற்றது.  இதில் சாகித்திய அகாதெமி தென்மண்டல செயலர்,  அ.சு. இளங்கோவன், புகழ்மிகு கன்னட கவிஞர் சந்திரசேகர் பாட்டில், சாகித்திய அகாதெமி கன்னட ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு சித்தலிங் பட்டன்ஷெட்டி,  சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினரும் தமிழ் ஆலோசைக்குழு உறுப்பினருமான மகரந்தன் ஆகியோர் பங்கேற்றனர். 





Sunday, June 26, 2011

இணைக்க
பிடிமானம் 

கிழிந்த கந்தல் துணியைப்போல்
தண்ணீரின்மேல்
தொங்கிக் கொண்டிருக்கும்
தனது கிளைகளோடு 
உறுதியாக நிற்கிறது
'கரீத்'.*

வருடா வருடம் 




  

Monday, March 28, 2011

"தலித் இலக்கியம் பண்பாடு மற்றும் அடித்தள மக்கள் ஆய்வுகள்"

இணைக்க

சாகித்திய அகாதெமி, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து "தலித் இலக்கியம் பண்பாடு மற்றும் அடித்தள மக்கள் ஆய்வுகள்"  எனும் தலைப்பில் நடத்தும் இருநாள் கருத்தரங்கு,  புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரி கருத்தரங்க வளாகத்தில் நாளை (29-மார்ச்) மற்றும் நாளை மறுநாள் (30-மார்ச்௦) நடைபெறுவதாக இருந்தது.  தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்ச்சி நடைபெறும் இடம் : சின்ன சுப்பராய வீதி, எண்.30, பிலிசு இன் கருத்தரங்க வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இருநாள் நிகழ்வுகளும் இவ்விடத்திலேயே நடைபெறும்.   

             

Saturday, March 26, 2011

தலித் இலக்கியம் பண்பாடு மற்றும் அடித்தள மக்கள் ஆய்வுகள்

இணைக்க




சாகித்திய அகாதெமி, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து "தலித் இலக்கியம் பண்பாடு மற்றும் அடித்தள மக்கள் ஆய்வுகள்"  எனும் தலைப்பில் நடத்தும் இருநாள் கருத்தரங்கு. 

நாள் : 29-30, மார்ச் 2011

இடம் : கருத்தரங்க வளாகம், தாகூர் கலைக்கல்லூரி
               புதுச்சேரி. 












Wednesday, March 2, 2011

அஸ்மிதா

இணைக்க
சாகித்திய அகாதெமி நடத்தும் பெண்கள் கவியரங்கம்

நாள் : ௦05.02.2011 (சனிக்கிழமை) மாலை : 5.30  மணி 

இடம்: ஜெயராம் உணவகம், புதுச்சேரி 

அஸ்மிதா 



Friday, January 28, 2011

இரவு நெறிகள்

இணைக்க



இரவு நெறிகள் 

மரணம் -
தொங்கிக் கொண்டிருக்கிறது கனமாக
துர்நாற்றமெடுக்கும்  இரவின் காற்றில்.

அது வீசுகிறது
வெள்ளை நடைபாதையான
எனது எலும்புகளின் ஊடாக.

சுருள் படிக்கட்டுகளான
எனது முதுகெலும்பில்
அதன் அழுத்தமான காலடிகள் ஏறும்போது,
அதன் அமைதி,
எனது இரத்தக்கதவுகளைச்
சன்னமாகத் தட்டுவதை
நான் கேட்கமுடியுமா ?

அல்லது -
மின்னும் கூர்மையான கட்டாரியின் முனையால்
அறுபடும் இடைவெளியில்
அதிரும் இரவின் சதைபோல்
அது கீழிறங்கி வருமா ?

வாழ்வென்பது
ஒரு தனிப்பறவை
உடற்கூண்டிற்குள் மாட்டிக்கொள்வது.

நிலவின் விழிப்பான விழிகள்
நான் எங்கு சென்றாலும் பின்தொடர்கிறது.

மேலும் -
எனது வீட்டுமுற்றத்தில்
திமிர்த்த மரங்கள்
எதிர்த்து நிற்கின்றன
முகமுடி அணிந்த தீவிரவாதிகள்
என்னை நோக்கி
அவர்களது துப்பாக்கி முனையை நீட்டியிருப்பதைப் போல்   

  ஆங்கில மூலம் : துர்கா பிரசாத் பாண்டே 
  தமிழில் : மகரந்தன்