Friday, August 19, 2011

லெனின் தங்கப்பாவுக்கு சாகித்திய அகதெமி விருது

இணைக்க
லெனின் தங்கப்பாவுக்கு சாகித்திய அகதெமி விருது 




Friday, August 5, 2011

புதுச்சேரியில் சாகித்திய அகாதெமி இலக்கியத் திருவிழா

இணைக்க
ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 150 வது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி சார்பில், 2011 ஜூலை29ஆம் தேதி தொடங்கி,  அகஸ்ட் 3ஆம் தேதி வரை ஆறு நாட்கள் புதுச்சேரி வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்ற  புத்தகக் கண்காட்சியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் கலை பண்பாட்டு அமைச்சர் திரு பி.எம்.எல். கல்யாணசுந்தரம் அவர்கள்,  ஜூலை29ஆம் தேதி  தொடங்கிவைத்தார்.  அருகில், சட்ட மன்ற உறுப்பினர் திரு க. லட்சுமிநாராயணன், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் மகரந்தன், சாகித்திய அகாதெமி தென்மண்டலச் செயலர் அ.சு. இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். 





தென்மண்டலச் செயலர் அ.சு.இளங்கோவன் வரவேற்புரை ஆற்றுகிறார். 

விழாவில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர். 

மகரந்தன் தலைமையுரை ஆற்றுகிறார். 


மாண்புமிகு கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு பி.எம்.எல். கல்யாணசுந்தரம் அவர்களை சால்வை அணிவித்து கெளரவிக்கிறார் தென்மண்டலச் செயலர் இளங்கோவன் 


சட்ட மன்ற உறுப்பினர் திரு க. லட்சுமிநாராயணன் அவர்களை கெளரவிக்கிறார் மகரந்தன் 


எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்கள் கௌரவிக்கப்படுகிறார்.




புத்தகக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிடுகிறார் அமைச்சர் திரு . கல்யாணசுந்தரம் அவர்கள். 

சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் வாழ்த்துரை 

எழுத்தாளர் கி.ரா. அவர்களின் சிறப்புரை 

சாகித்திய அகாதெமி புதுச்சேரி பொறுப்பாளர் புருஷோத்தமன் அவர்களின் நன்றியுரை. 

சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள கவிஞர் தமிழொளி கவிதை நூலினை அமைச்சர் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறார், சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் மகரந்தன்.