உன் ஆழ்மனத்தினுள்
ஒரு நாளைக் கழிக்க விரும்புகிறேன்.
நான் -
என்ன கண்டுபிடிக்கப் போகிறேன் என்று
யாருக்குத் தெரியும் ?
உனது பிரகாசமான எதிர்காலத்தையா
உனது இரகசிய அச்சத்தையா
உனது இருட்டு ஆசைகளையா
உனது பயங்கர கனவுகளையா
அல்லது
உனது சிரிப்பின் பின்னால் ஒளிந்திருக்கும்
உனது கோரமுகத்தையா ?
அநேகமாய்
என்னிடமிருந்து நீ திருடிய
ஒரு கருப்பொருளை மீட்டெடுக்கலாம்
அல்லது
உன் ஆழ்மன எண்ணங்களில்
சில அம்பலப்படலாம்.
இவற்றையெல்லாம்விட
ஆண்டு முழுவதும்
என்னைப்பற்றி
உண்மையிலேயே நினைத்தது என்ன
என்பதைப் பற்றி
தெரிந்துகொள்ளலாம்.
ஆகவே -
உன் ஆழ்மனத்தினுள்
ஒரு நாளைக் கழிக்க விரும்புகிறேன்
என் எதிர்காலத்தைத் திட்டமிட.
- மகரந்தன்.
2 comments:
கவிதையில் தொனிக்கும் பொருள் ஆழமானது. எளிமையோடு கூடிய தெளிவும், பார்வையும் கவிதையின் கனபரிமாணத்தை அளவிடும் சரியான கட்டுக்கோப்பில் இயங்குகிறது,
Thanks Professor.
Post a Comment