
வர்ண ஜொலிப்பு
வாண வேடிக்கைகளோடு
பிரதிஷ்டை செய்யப்பட்டது
மண்குதிரை.
இது...
காவல் தெய்வங்களின்
புறப்பாட்டிற்கானது.
இதன்மீது ஏறித்தான்
கூட்டணியில் தெய்வங்கள்
வேட்டைக்குப் போகும்
புலிகளைவிடுத்து
எலிகளை வேட்டையாடும்.
வேட்டைப் பொருள்களாக
பத்மினிகளின் கற்போ
அப்பாவிகளின் கண்ணீரோ
சாபமோ கிடைக்கும்
கடமையை மறந்த
காவல் தெய்வங்கள்
தங்களுக்குள் இட்டுக்கொள்ளும்
குடுமிச் சண்டையில்
குதிரையின் பாகங்கள்
உதிர்ந்த ரோமங்களாகும்.
தெய்வங்கள்
பதவி இழக்கும்.
மூடக் குயவர்கள்
மறுபடியும் ஒன்றுகூடி
குதிரை செய்வார்கள்.
2 comments:
//வேட்டைப் பொருள்களாக
பத்மினிகளின் கற்போ
அப்பாவிகளின் கண்ணீரோ
சாபமோ கிடைக்கும்//
சார்! பத்தினிகளின் கற்பா அல்லது பத்மினிகளின் கற்பா?
கவிதை அருமை!
வெங்கடேஷ்
பத்மினிகளின் கற்பு பத்தினிகளின் கற்புக்கு குறியீடு
- மகரந்தன்
Post a Comment