யார் பார்த்தார்
மான அவமானங்களை
பிச்சைதான் இன்னும்
அவரவர் தகுதிக்கேற்ப
வந்துவிழும்
எச்சில் பருக்கைகளுக்கு
கையேந்தியபடியே
கடந்துகொண்டிருக்கிறது
காலம்
வலிகளின் சுருக்கம்
சருமங்கள் தோறும்
Tuesday, October 23, 2007
Saturday, October 20, 2007
உளிகள்

விமர்சனம் செய்கின்றாய்.
அவர்கள் சிற்பிகள்
எனவே செதுக்குகின்றனர்
வடிவம் பெறுகின்றாய்.
வடித்தவனே வணங்க வருவான்
ஏனெனில்
அப்போது நீ
தெய்வம்.
செக்குமாடுகள்

புதிதாய் எதையும்
எழுதவே இல்லை.
ஆயினும்
எழுதி எழுதியே
தீர்ந்துபோனது
மைக்குச்சி.
சுற்றத்தார் கூடி
'உச்' கொட்டி
பழம்பெருமையில் தூக்கிப்போட்டனர்.
கடைசியில்
வேறொன்றை எடுத்து
நிரப்பிக் கொண்டனர்.
அதுவும் ஒருநாள் . . .
எழுதவே இல்லை.
ஆயினும்
எழுதி எழுதியே
தீர்ந்துபோனது
மைக்குச்சி.
சுற்றத்தார் கூடி
'உச்' கொட்டி
பழம்பெருமையில் தூக்கிப்போட்டனர்.
கடைசியில்
வேறொன்றை எடுத்து
நிரப்பிக் கொண்டனர்.
அதுவும் ஒருநாள் . . .
Saturday, October 13, 2007
Subscribe to:
Posts (Atom)