புதிதாய் எதையும்
எழுதவே இல்லை.
ஆயினும்
எழுதி எழுதியே
தீர்ந்துபோனது
மைக்குச்சி.
சுற்றத்தார் கூடி
'உச்' கொட்டி
பழம்பெருமையில் தூக்கிப்போட்டனர்.
கடைசியில்
வேறொன்றை எடுத்து
நிரப்பிக் கொண்டனர்.
அதுவும் ஒருநாள் . . .
Saturday, October 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மகரந்தன் ஐயா,
உங்கள் கவிதைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. தமிழ் மணத்தில் இணைந்து எழுதவந்ததற்கு உங்களை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன் !
அன்புடன்.
கோவி.கண்ணன்
Post a Comment