புணர்தலும்
புணர்தல் நிமித்தமுமாய்
அவர்கள் தங்கியிருந்தக் கூடாரம்
அவர்களைத்
தாங்கக் கூடாததாயிற்று.
உள்முக
தீர்க்கதரிசிகளும்
ஆச்சாரியர்களும்
மாயக்காரர்களாயிருந்தபடியால்
கழுதையின்மேல் சேணம் வைத்து
நகர்வலம் போகிறது
அழுக்கு.
பேச்சுத்துணைக்கு ஆதரவரற்று
தனித்துக்கிடக்கும்
ஒலிவாங்கியின்
வாய்களில் மாட்டிக்கொண்டு
போக்கிடமற்று நெளிகின்றன
பாவப்பட்ட புழுக்கள்.
நேர்மையீனமாக்கப்பட்ட
சமனில்
யார் ஆசையையும்
பிரதிபலிக்காது
புளகாங்கிதமடைகிறது
விபச்சாரக்காரர்களால்
நிறைந்திருக்கும்
சாபத்தினால் நிரப்பப்பட்டிருக்கும்
தேகம்.
-மகரந்தன்
Friday, November 6, 2009
Subscribe to:
Posts (Atom)